உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோயம்பேடில் கவிழ்ந்த லாரி தப்பிக்க குதித்த ஓட்டுநர் பலி 

கோயம்பேடில் கவிழ்ந்த லாரி தப்பிக்க குதித்த ஓட்டுநர் பலி 

கோயம்பேடு, கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சங்கர், 38. இவர், குன்றத்துார் அடுத்த எருமையூர் பகுதியில் உள்ள கிரஷரில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, ஜல்லி லோடு ஏற்றி கோயம்பேடு பகுதியில் புதிதாக கட்டுமான பணிகள் நடந்து வரும் இடத்திற்கு சென்றார்.லாரியில் இருந்த ஜல்லியை இறக்குவதற்காக, லாரியை ரிவர்ஸ் எடுத்தபோது, அங்கிருந்த கழிவுநீர் தொட்டியின் மூடி உடைந்து, லாரியின் பின்பக்க டயர் சிக்கி கவிழ்ந்தது.அப்போது, சங்கர் தப்பிப்பதற்காக லாரியில் இருந்து எகிறி குதித்த போது, எதிர்பாராத விதமாக அவர் மீது லாரி கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை