மேலும் செய்திகள்
கன்டெய்னர் லாரியில் மோதிய சொகுசு பஸ்
19-Sep-2025
சென்னை, அண்ணா சதுக்கம் அருகே மாநகர பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, இரண்டு ஆட்டோக்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில், இருவர் பலத்த காயமடைந்தனர். சென்னை கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணாசதுக்கம் வரை செல்லும், தடம் எண் 2ஏ மாநகர பேருந்தில், நேற்று முன்தினம் இரவு ஓட்டுநராக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன், 43, என்பவர் பணியில் இருந்தார். பேருந்து, அண்ணாசதுக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது, ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்படவே, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது மோதியது. இதில், ஆட்டோ ஓட்டுநர்களான பெரம்பலுாரைச் சேர்ந்த மணிமாறன், 37, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், 42, ஆகியோர் படுகாயமடைந்தனர். சக ஓட்டுநர்கள் படுகாயமடைந்த ஓட்டுனர்களையும், பேருந்து ஓட்டுநரையும் மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
19-Sep-2025