மேலும் செய்திகள்
2 மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது
28 minutes ago
இன்ஸ்பெக்டர் புஹாரி ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago
வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம்
1 hour(s) ago
சென்னை, சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ஓட்டுனர் இல்லாத 138 மெட்ரோ ரயிலை தயாரிக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ ரயிலும், மூன்று பெட்டிகளைக் கொண்டிருக்கும்.முதல் கட்டமாக, ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று பெட்டிகளைக் கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்கும் ஒப்பந்தம், அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துடன், கடந்த 2022 நவ., 17ல் மேற்கொள்ளப்பட்டது. கூடுதலாக மூன்று பெட்டிகளைக் கொண்ட 10 மெட்ரோ ரயில்களை, 269 கோடி ரூபாய் மதிப்பில் தயாரித்து வழங்க, அதே நிறுவனத்துடன் கடந்த ஆண்டு நவ., மாதத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இதற்கிடையே, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ஓட்டுனர் இல்லாத முதல் ரயில் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் இன்று துவக்கப்படுகிறது.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் தற்போது, ஓட்டுனர்கள் கொண்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுனர் இல்லாமல், தானியங்கி தொழில்நுட்ப முறையில் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி -- போரூர் இடையே மூன்று பெட்டிகள் கொண்ட, ஓட்டுனர் இல்லாத ரயில்கள், அடுத்தாண்டு டிசம்பரில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.ரயிலில்,'மொபைல் சார்ஜிங்' முனைகள் முதல் நவீன சக்தி வாய்ந்த பாதை வரைபடம் வரை, பல புதிய அம்சங்கள் இடம் பெற்று இருக்கும். மூன்று பெட்டிகள் கொண்ட ரயிலில், ஒரு பெட்டியின் குறிப்பிட்ட பகுதி பெண்களுக்காக ஒதுக்கப்படும். ரயிலில் பாதுகாப்பை மேம்படுத்த ரயிலின் முன்பக்கம், வலது, இடது பக்கம் மற்றும் பின்புற பகுதிகளில் கேமராக்கள் நிறுவப்படும்.இது தவிர, தீ கண்டறிதல் முறை, தடம் புரள்வதை கண்டறியும் முறை மற்றும் இடையூறுகளை கண்டறியும் முறை உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.ரயில் தயாரிக்கப்பட்டு சென்னைக்கு வந்த பிறகு, எட்டு முதல் 10 மாதங்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
28 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago