உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் ஒயரை கையில் எடுத்து மிரட்டல் விடுத்த போதை ஆசாமி

மின் ஒயரை கையில் எடுத்து மிரட்டல் விடுத்த போதை ஆசாமி

வடக்கு கடற்கரை, மண்ணடி, மூர் தெருவைச் சேர்ந்தவர் பாலு என்ற பரட்டை பாலு, 28. சாலையோர நடைமேடையில் வசிக்கும் நிலையில், ஏற்கனவே, இவர் மீது வாலிபர் ஒருவரை கத்தியை காட்டிய மிரட்டிய வழக்கு உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இரண்டாவது கடற்கரை சாலை, போஸ்ட் ஆபீஸ் தெரு சந்திப்பில், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டார்.அப்போது, ரோந்தில் ஈடுபட்டிருந்த, வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸ்காரர் தனஞ்செழியன், ரகளையில் ஈடுபட்ட பாலுவை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார்.ஆத்திரமடைந்த பாலு, போலீஸ்காரர் தனஞ்செழியனை தகாத வார்த்தையில் திட்டியதுடன், மதுபாட்டிலை உடைத்து குத்த முயன்றுள்ளார். சுதாரித்தவர் அவரை பிடிக்க முயன்றபோது, அருகில் இருந்த தெருவிளக்கு மின் ஒயரை பிடுங்கி, தன்னை பிடித்தால், மின்சாரத்தில் கை வைத்து தற்கொலை செய்துக் கொள்வேன் என, மிரட்டியுள்ளார்.அதிர்ந்து போன தனஞ்செழியன், சக போலீஸ்காரர்களுக்கு தகவல் கொடுத்து, பாலுவை மடக்கி பிடித்து கைது செய்து, அவர் மீது, கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !