உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார் டிரைவருக்கு வெட்டு போதை ஆசாமிகள் கைது

கார் டிரைவருக்கு வெட்டு போதை ஆசாமிகள் கைது

கொடுங்கையூர், கொடுங்கையூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், 28; கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி உமா என்ற மனைவி உள்ளார்.கடந்த ஓராண்டாக கருத்து வேறுபாடு காரணமாக, கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். ராஜ்குமார், தன் தாய் கீதாவுடன் வசிக்கிறார்.இந்நிலையில், நேற்று ராஜ்குமார் வீட்டிற்கு மது போதையில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரை வெளியே அழைத்து, கத்தியால் வெட்டினர்.இதில் படுகாயமடைந்த ராஜ்குமாரை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், வியாசர்பாடி, எஸ்.ஏ., காலனியை சேர்ந்த டில்லிபாபு, 32, பெருமாள், 26, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ