மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை; கடலுார் வாலிபர் கைது
28-Dec-2024
ஓட்டேரி, ஓட்டேரி, பட்டாளம், எத்திராஜ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன், 28; 'மஹிந்திரா' டூரிஸ்ட் வேன் ஓட்டி வருகிறார். கடந்த 28ம் தேதி காலை, ஓட்டேரி டோபிகானா பார்க் அருகில் வேனை நிறுத்தி சென்றார். மாலையில் வந்து பார்த்தபோது, வேனின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.கொசப்பேட்டையை சேர்ந்த வினோத், 28, என்பவர், போதையில் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, ஆபாசமாக பேசியதோடு மிரட்டலும் விடுத்துள்ளார்.இது குறித்து, ஓட்டேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், போதையில் ரகளையில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டவர் வினோத் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
28-Dec-2024