உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டி - 20 சாம்பியன் ஆப் சாம்பியன் எபினேசர் மார்கஸ் அணி வெற்றி

டி - 20 சாம்பியன் ஆப் சாம்பியன் எபினேசர் மார்கஸ் அணி வெற்றி

சென்னை:திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கோபு மெமோரியல் டி - 20 சாம்பியன் ஆப் சாம்பியன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.இதில், முதல் நான்கு டிவிஷன் போட்டிகளில், முதல் இரண்டு இடங்களை பிடித்த எட்டு அணிகள் மோதி வருகின்றன.நேற்று பட்டாபிராமில் நடந்த முதல் காலியிறுதியில், சென்னை பெட்ரோலியம் மற்றும் எபினேசர் மார்கஸ் அணிகள் மோதின.முதலில் விளையாடிய சென்னை பெட்ரோலியம் அணி, 19.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 139 ரன்கள் அடித்தது.அடுத்து பேட்டிங் செய்த எபினேசர் மார்கஸ் அணி, 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, 142 ரன்கள் அடித்து, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆவடியில் நடந்த இரண்டாவது காலிறுதியில், யுனிவர்சல் சி.சி., அணி, 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 100 ரன்களை அடித்தது.அடுத்து பேட்டிங் செய்த ஸ்டாண்டர்ட் சி.சி., அணி, 13.1 ஓவர்களில் மூன்று விக்கெட் இழந்து, 102 ரன்களை அடித்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ