மேலும் செய்திகள்
ஆசிய இளையோர் போட்டி: கடலுார் மாணவி பங்கேற்பு
23-Oct-2025
சென்னை: பஹ்ரைன் நாட்டில் நடந்த ஆசிய இளையோர் தடகள போட்டியில், இரண்டு வெள்ளி பதக்கங்கள் வென்று அசத்திய தமிழகத்தின் எட்வினா ஜேசனுக்கு, சென்னையில் நேற்று உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. வளைகுடான நாடான பஹ்ரைனில், ஆசிய இளையோர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 40 நாடுகளைச் சேர்ந்த 8,000க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். தடகளப் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று, ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்று அசத்திய, திருநெல்வேலியைச் சேர்ந்த எட்வினாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரை நேரில் சந்தித்த தமிழக துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்ததுடன், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். எட்வினா கூறுகையில், ''ஆசிய அளவில் 2 பதக்கங்கள் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது, என் இரண்டாவது சர்வதேச போட்டி; முதல் போட்டியில் மனதளவில் தடுமாறியதால் பதக்க வாய்ப்பை இழந்தேன். ''ஆனால் கடின உழைப்பும், மன உறுதியும் இன்று என்னை, இந்த சாதனைக்குத் துாண்டின. எனக்கு ஆதரவாக இருந்த என் பயிற்சியாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்,'' என்றார்.
23-Oct-2025