மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
09-Dec-2024
டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம், கால்வாய் சாலையை சேர்ந்தவர் வினோத், 44. இவரது வீட்டில், நடராஜன், 65, என்பவர், இரு மகன்களுடன் 'லீசு'க்கு குடியிருக்கிறார். மனைவி இறந்த விரக்தியில், நடராஜன் அதீத மதுபோதையில், குடியிருப்பில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால், வீட்டின் உரிமையாளர் வினோத்துக்கும், நடராஜனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.இந்நிலையில், நேற்று அதிகாலை 1:50 மணிக்கு, மதுபோதையில் இருந்த நடராஜன், வீட்டின் வெளியில் நின்றிருந்த வினோத் குடும்பத்திற்கு சொந்தமான, நான்கு இருசக்கர வானங்களை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.தகவல் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இதில், நான்கு வாகனங்கள் கருகின.டி.பி., சத்திரம் போலீசார், நடராஜனை கைது செய்தனர்.வில்லிவாக்கம், தாதாங்குப்பம் ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 35. கடந்த 21ம் தேதி மதியம், இவரது வீட்டருகே வசிக்கும் உறவினரான வாசு, அவரது மனைவி அமுதா ஆகிய இருவரும் சண்டை போட்டுள்ளனர். சண்டையை தடுத்த ரமேஷ், அமுதாவை, அவரது அம்மா வீடான பல்லாவரத்தில் கொண்டு போய் விட்டுள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்த வாசு, நேற்று முன்தினம் ரமேசை தாக்கியுள்ளார். பின் நேற்று அதிகாலை 1:00 மணி அளவில், ரமேஷ் வீட்டுக்கு தன் உறவினர்களுடன் சென்ற வாசு, அவரது பைக்கை தீ வைத்து கொளுத்தி உள்ளார்.இதில் ரமேஷ் பைக் அருகே நின்றிருந்த மற்றொரு பைக்கும் தீயில் சிக்கி எரிந்தது. இது குறித்து புகாரின்படி ராஜமங்கலம் போலீசார், ராமசாமியை கைது செய்து, தலைமறைவான வாசு, சக்திவேல், முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
பைக்கை எரித்தவர் கைதுவில்லிவாக்கம், தாதாங்குப்பம் ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 35. வாடகை வீட்டில் வசிக்கும் இவர், சமையல் காஸ் ரிப்பேர் செய்யும் பணி செய்து வருகிறார். கடந்த 21ம் தேதி மதியம், இவரது வீட்டருகே வசிக்கும் உறவினரான வாசு, அவரது மனைவி அமுதா ஆகிய இருவரும் சண்டை போட்டுள்ளனர். சண்டையை தடுத்த ரமேஷ், அமுதாவை, அவரது அம்மா வீடான பல்லாவரத்தில் கொண்டு போய் விட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த வாசு, நேற்று முன்தினம் ரமேசை தாக்கியுள்ளார். பின் நேற்று அதிகாலை 1:00 மணி அளவில், ரமேஷ் வீட்டுக்கு தன் உறவினர்களுடன் சென்ற வாசு, அவரது பைக்கை தீ வைத்து கொளுத்தி உள்ளார். இதில் ரமேஷ் பைக் அருகே நின்றிருந்த மற்றொரு பைக்கும் தீயில் சிக்கி எரிந்தது. இது குறித்து ரமேஷ், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த ராஜமங்கலம் போலீசார், ராமசாமி, 41யை நேற்று கைது செய்தனர். தலைமறைவான வாசு, சக்திவேல், முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
09-Dec-2024