உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி முதியவர் தர்ணா

ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி முதியவர் தர்ணா

தாம்பரம்:பல்லாவரம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, முதியவர் ஒருவர், மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். குரோம்பேட்டை, கட்டபொம்மன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோதண்டபானி, 74. இவர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாம்பரம் மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து, நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார். ௶'பல்லாவரம் பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். 'குரோம்பேட்டை நாயுடுஷாப் சாலையில், பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிறுபாலத்தை இடித்துவிட்டு, புதிய சிறுபாலம் கட்ட வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். மாநகராட்சி அதிகாரிகள், அவருடன் பேச்சு நடத்தினர். 'சிறுபாலத்தை இடித்துவிட்டு புதிதாக சிறுபாலம் கட்ட டெண்டர் கோரப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்' என, அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து, முதியவர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ