மேலும் செய்திகள்
16,000 குழந்தைகளுக்கு அப்பல்லோவில் இதய ஆப்பரேஷன்
07-Aug-2025
சென்னை, இதய பெருநாடி வால்வு பாதித்த 70 வயது முதியவருக்கு, இந்தியாவில் முதல் முறையாக, 'எட்வர்ட்ஸ் சேப்பியன் - 3 அல்ட்ரா ரெசி லியா டிரான்ஸ்கேத்தெட்டர்' என்ற வால்வு மாற்றி, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் மறு வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது . இது குறித்து, மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர் செங்கோட்டுவேலு கூறியதாவது: இதய பெருநாடி வால்வு பாதிக்கப்பட்ட 70 வயது முதியவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை, மிகவும் ஆபத்தான ஒன்றாக கருதப்பட்டது. ஏற்கனவே, 'கரோனரி ஸ்டென்ட்' பொருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மிகவும் மேம்பட்ட 'ரெசிலியா' தொழில்நுட்பத்தில் குறைந்த ஊடுருவல் முறையில் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, இந்தியாவில் முதல் முறையாக, 'எட்வர்ட்ஸ் சேப்பியன் - 3 அல்ட்ரா ரெசிலியா டிரான்ஸ்கேத்தெட்டர்' என்ற வால்வு, நோயாளிக்கு பொருத்தப்பட்டது. வழக்கமான வால்வுகளை விட இவை நீண்ட காலம் செயல்படும் ஆற்றல் கொண்டவை. மேலும், மிகவும் ஆபத்தான நோயாளிகளுக்கு கூட அதிக நம்பிக்கையுடன் சிகிச்சை அளிக்க முடியும். இதய முன்னேற்றம் விரைவாக கிடைப்பதுடன், சிக்கல் களின் அபாயங்களையும் குறைத்து, ஆரோக்கியமான வாழ்வை உறுதி படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
07-Aug-2025