மேலும் செய்திகள்
பூட்டிய வீட்டில் கொள்ளை பலே ஆசாமிகள் 3 பேர் கைது
28-Dec-2024
சென்னை, சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், 45; அ.தி.மு.க., வட்டச் செயலர். இவர் கடந்த, 15ம் தேதி இரவு குடும்பத்துடன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அவரது ஒன்பது மாத குழந்தையின் 2 சவரன் கொலுசை மர்மநபர் திருடிச் சென்றார். இது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரித்தனர். இதில், கோட்டூர்புரம், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கலைவாணி, 60, என்பவர் திருடியது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், நகையை மீட்டனர்.
28-Dec-2024