உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில் மோதி மூதாட்டி பலி

ரயில் மோதி மூதாட்டி பலி

தாம்பரம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில், 74 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் விரைந்து வந்து, மூதாட்டியின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், இறந்த மூதாட்டி, கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கத்தை சேர்ந்த அன்னம்மாள், 74, என்பதும், அவருக்கு காது சரியாக கேட்காது என்பதும் தெரியவந்தது.தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை