மேலும் செய்திகள்
பணி நிறைவு பாராட்டு விழா
20-Nov-2024
அம்பத்துார்: அம்பத்துார், மதுரா மேட்டூர் 6வது தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன், 58; எலக்ட்ரீஷியன். நேற்று முன்தினம் மாலை, பாரிஜாதம் தெருவில் உள்ள திருநாவுக்கரசரின் வீட்டு வளாகத்தில் தேங்காய் பறிக்க, குணசேகரன் சென்றார்.இதற்காக, அங்குள்ள 12 அடி உயர சுவரில் ஏறிய குணசேகரன், இரும்பு தொரட்டி வாயிலாக தேங்காய் பறிக்க முயன்றார்.அப்போது, எதிர்பாராத விதமாக மின் கம்பியில் தொரட்டி உரசியது. இதில், குணசேகரன் உடம்பில் மின்சாரம் பாய்ந்து சரிந்து விழுந்துள்ளார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Nov-2024