உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரி சிக்கினார்

ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரி சிக்கினார்

மணப்பாக்கம், புதிய மின் இணைப்பு வழங்க, 15,000 ரூபாய் லஞ்சம் பெற்ற வணிக ஆய்வாளர் சிக்கினார்.சென்னை, மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர், தன்னுடைய இடத்தில் வணிக பயன்பாட்டிற்காக புதிதாக ஆறு கடைகள் கட்டியுள்ளார்.இக்கடைகளுக்கு வணிக ரீதியிலான மின் இணைப்பு கோரி, மணப்பாக்கம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, மின் இணைப்பு வழங்க வணிக ஆய்வாளர் அண்ணாமலை என்பவர், ஒவ்வொரு மின் இணைப்பிற்கும் தலா, 2,500 ரூபாய் வீதம், 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இது தொடர்பாக தினேஷ்குமார், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் புகார் அளித்தார். அதன்படி, நேற்று லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டு, ரசாயன பவுடர் தடவிய, 15,000 ரூபாயை தினேஷ்குமாரிடம் கொடுத்து அலுவலகத்திற்குள் அனுப்பினர்.அந்த பணத்தை லஞ்சமாக பெற்ற அண்ணாமலை, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். இதையடுத்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ