உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 20 ஆண்டுகள் அவதி மின் கம்பம் அகற்றம்

20 ஆண்டுகள் அவதி மின் கம்பம் அகற்றம்

மணலி புதுநகர் :மணலி புதுநகரில், 20 ஆண்டுகளுக்கும் மேலாகபோக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின் கம்பம் அகற்றப்பட்டது. சென்னை, மணலிபுதுநகர் - கணபதி நகர் சந்திப்பில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், மின் கம்பம்ஒன்று அகற்றப்படவில்லை. சாலை நடுவில் நின்ற மின் கம்பத்தால், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டும் பயனற்றதாக இருந்தது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதும், கனரக போக்குவரத்தால் மின்கம்பம் சேதமடைவதும் தொடர்கதையாக மாறின. இதனால், மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. அதன்படி, விச்சூர் - வெள்ளிவாயல் நலச்சங்கம் சார்பில், மின்வாரிய மேலாண் இயக்குநர் ராதாகிருஷ்ணனிடம், மின் கம்பத்தை மாற்றி தர கோரிக்கை வைக்கப்பட்டது.அவரது உத்தரவையடுத்து, நேற்று முன்தினம், மின் கம்பம் அப்புறப்படுத்தப்பட்டது.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின் கம்பம் அகற்றப்பட்டதையடுத்து, பகுதிமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ