உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து ஊழியர்கள் படுகாயம்

மின்சாரம் பாய்ந்து ஊழியர்கள் படுகாயம்

எம்.கே.பி.நகர், சென்னை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சர்மா நகர் மின்சார அலுவலகம் முன், மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களான செம்பியம் பகுதியைச் சேர்ந்த மோகனச்சந்திரன், 42, அரக்கோணத்தைச் சேர்ந்த மோகன், 47, ஆகியோர், நேற்று, 'ஹாமர் டிரில்லிங் மிஷின்' வைத்து பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, மிஷின் ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை