உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனநலம் பாதித்தவர்களுக்காக 14ல் வேலைவாய்ப்பு முகாம்

மனநலம் பாதித்தவர்களுக்காக 14ல் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை சிஷோப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற, 'ஸ்கார்ப்' சார்பில், மனநல பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், சென்னையில் வரும், 24ம் தேதி நடைபெறுகிறது.இதுகுறித்து, 'ஸ்கார்ப்' அமைப்பின் தலைவர் சேஷாயி, துணை தலைவர் தாரா, இயக்குனர் பத்மாவதி ஆகியோர் கூறியதாவது:மனநல பாதிப்பு மற்றும் அதுசார்ந்த தற்கொலை எண்ணங்களால் துாண்டப்படுவோரைக் காக்க, லாப நோக்கமற்ற, 'ஸ்கார்ப்' அமைப்பு, 1984ல் துவங்கப்பட்டது. மனநல ஆராய்ச்சி மட்டுமின்றி, பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான நோயறிதல், சிகிச்சை, சிறப்பு பயிற்சிகள் உள்ளிட்ட சேவைகளையும் வழங்கி வருகிறோம்.உடல் அளவில் சர்க்கரை நோய், இதய நோய் இருப்பதைப் போன்றுதான், மனதளவில் சில பாதிப்புகள் இருப்பதையும் கருத வேண்டும். எனவே, மனநல பாதிப்புக்கு உள்ளானவர்களை புறக்கணிக்கக் கூடாது.அவர்களுக்கு மருந்துகளும், சிகிச்சைகளும் அளிப்பதை மட்டும் நாங்கள் கடமையாக கருதவில்லை. மாறாக, சமூகத்தில் அவர்களை மீண்டும் இணைய வைப்பதையும் முக்கியப் பொறுப்பு உள்ளவர்களாக நினைக்கிறோம்.அதனால்தான், மன நல சிகிச்சை பெற்றவர்களுக்கான புனர்வாழ்வு பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துகிறோம். அந்த வகையில், இரண்டு ஆண்டுகளில், 400க்கும் மேற்பட்டவர்கள், எங்கள் வாயிலாக பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தனர். அதில், 60க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள, 'ஸ்கார்ப் இந்தியா' அமைப்பின் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம், வரும், 14ம் தேதி நடைபெற உள்ளது. மன நல சிகிச்சை பெறக் கூடியவர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.உற்பத்தி தொழிற்சாலைகள், சேவை மையங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என, 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, தகுதிக்கேற்ப பணிகளை வழங்க உள்ளன.தற்போது வரை, 200 பேர் பதிவு செய்துள்ளனர். வேலைவாய்ப்பு முகாம்களுக்கு வருபவர்கள் ஆதார், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். சமூகத்தில் மன நலம் பாதித்தவர்களை புறக்கணிக்காமல் அரவணைப்பது அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.**


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை