என்கவுண்டர் விவகாரம்: எல்.முருகன் பேட்டி
சட்டம், நீதித்துறை உள்ளிட்டவை இருக்கும் போது, காவல் துறை சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. என்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர் தானே தவிர, குற்றவாளிகள் கிடையாது. குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும். காவல்துறை என்கவுன்டர் மூலம் சட்டத்தை கையில் எடுத்து உள்ளதை வழக்கறிஞர் என்ற முறையில் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.- எல்.முருகன், பா.ஜ., மத்திய அமைச்சர்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zb115c5q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் என்கவுன்ட்டர் அதிகரித்து வருகிறது. இது நல்லதல்ல. காவல்துறை துப்பாக்கியால் சுடுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு காவல் துறையினர் கூறும் காரணங்கள் நம்பும் படியாக இல்லை.- கே.பாலகிருஷ்ணன்மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,