உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஈ.வி.பி., பிலிம் சிட்டி உரிமையாளர் கைது

ஈ.வி.பி., பிலிம் சிட்டி உரிமையாளர் கைது

சென்னை, மதுபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய, ஈ.வி.பி., பிலிம் சிட்டி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அண்ணாசாலை - கிரீம்ஸ் சாலை சந்திப்பு ஆயிரம் விளக்கு பகுதியில், போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து, நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 11:10 மணியளவில் அதிவேகமாக வந்த ஆடி சொகுசு கார், போலீசாரின் கேமரா பொருத்தப்பட்ட தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தடுப்பு விழுந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த எஸ்.ஐ., சஞ்சீவி என்பவரது புல்லட் வாகனம் சேதமடைந்தது. போலீசார் ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில், ஈ.வி.பி., பிலிம் சிட்டி உரிமையாளரான சந்தோஷ்வரர் ரெட்டி, 47 என்பதும், மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. விசாரித்த திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை