மொபைல் போன் திருடிய பழைய குற்றவாளிகள் கைது
வடக்கு கடற்கரை, கொருக்குப்பேட்டை, தங்கவேல் கார்டன் 3வது தெருவைச் சேர்ந்தவர் மோகன், 39; பெயின்டர். இவர், கடந்த 5ம் தேதி வேலை முடித்து, பென்சில் பேக்டரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தடம் எண்: 44சி மாநகர பேருந்தில் ஏறி, பீச் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது, அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் திருடு போனது.இது குறித்து விசாரித்த வடக்கு கடற்கரை போலீசார், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அப்துல் வகாப், 22, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சியான் லாரன்ஸ், 23, கொடுங்கையூரைச் சேர்ந்த வினோத், 23, ஆகியோரை கைது செய்தனர்.விசாரணையில், பேருந்து பயணியர் மற்றும் சாலையில் நடந்து செல்வோரிடம், கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து நான்கு மொபைல் போன்கள், 2,000 ரூபாய், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட அப்துல் வகாப் மீது ஏற்கனவே 13 குற்ற வழக்குகளும், சியான் லாரன்ஸ் மீது ஏழு வழக்குகளும், வினோத் மீது 9 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.கைது செய்யப்பட்ட மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.