உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மடிப்பாக்கம் பஸ் நிலையம் மேம்படுத்த எதிர்பார்ப்பு

மடிப்பாக்கம் பஸ் நிலையம் மேம்படுத்த எதிர்பார்ப்பு

மடிப்பாக்கம், பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கத்தில், தினமும் ஆயிரக்கணக்கானோர் மாநகர பேருந்துகளை பயன்படுத்தி, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.அதனால், காலை, மாலை நேரங்களில், பேருந்தில் கூட்டம் அலைமோதும். எனவே, மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக பயணியர் கோரி வருகின்றனர். இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.ஆனால், பேருந்து நிலையம் முழுக்க, தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு உள்ளன.இதனால், மாநகர பேருந்துகள் திரும்பி நிற்பதற்கு கூட போதுமான வசதிகள் இல்லை.இரவு நேரத்தில் பேருந்து நிலையம் மாட்டுத் தொழுவமாக மாறி விடுகிறது. காலையில் எங்கு பார்த்தாலும் சாணக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில், நவீன கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.அது, மழைக்காலத்தில் பயன்படுத்த முடியாத நிலையில், சுற்றிலும் கழிவுநீர் தேங்கியுள்ளது.எனவே, பேருந்து நிலையத்திற்கு நிழற்குடை, சுற்றுச்சுவர் அமைத்து மேம்படுத்தவும், கண்காணிப்பாளர் நியமித்து, பேருந்துகள் இயக்கப்படும் நேரம் குறித்த அறிவிப்பு பலகைகளை நிறுவவும் வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி