உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்க எதிர்பார்ப்பு

நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்க எதிர்பார்ப்பு

கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து, நிறுத்தப்பட்ட '32பி' மற்றும் 'பி18எஸ்' மாநகர பேருந்துகளை, மீண்டும் இயக்கக்கோரி போக்குவரத்து கழகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளரிடம், 42வது வார்டு கவுன்சிலர் ரேணுகா அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தண்டையார்பேட்டை, மண்டலம், 42வது வார்டுக்குட்பட்ட கொருக்குப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து, விவேகானந்தர் இல்லம் நோக்கி செல்லும் தடம் எண் '32பி' மற்றும் கிளாம்பாக்கம் வரை செல்லும் தடம் எண் 'பி18எஸ்' ஆகிய இரு பேருந்துகள், பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தன. மின்ட், போஜராஜன் நகர் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக சாலை மூடப்பட்டதால், மூன்று ஆண்டுகளாக, இந்த இரண்டு மாநகர பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த மாதம், போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணி நிறைவடைந்து, துணை முதல்வர் உதயநிதி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பெரிய கனரக வாகனங்கள் முதல், அனைத்து வாகனங்களும், தற்போது கண்ணன் தெரு வழியாக செல்கின்றன. இந்த பேருந்து சேவைக்காக, கொருக்குப்பேட்டையில் வசிக்கும் மக்கள், ஷேர் ஆட்டோ மூலம் மின்ட் ரவுண்டானாவுக்கு வந்து தான் பள்ளி, கல்லுாரி வேலைக்கு வெளியே செல்லும் நிலை உள்ளது. இதே நிலை தான் வீடு திரும்பும் போதும் உள்ளது. இதனால், பெரும் பொருட்செலவு ஏற்படுகிறது. மீண்டும் கொருக்குப்பேட்டை பேருந்து முனையத்தில் இருந்து, '32பி' மற்றும் 'பி18எஸ்' மாநகர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை