மேலும் செய்திகள்
கால்நடை மருத்துவமனை விவசாயிகள் கோரிக்கை
25-Oct-2024
ஆவடி, ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம் முதல் பள்ளிக்கூட தெருவில் 30 ஆண்டுகளுக்கு முன், மாவட்ட கால்நடை கிளை மருத்துவமனை செயல்பட்டது.இந்த மருத்துவமனையில், பட்டாபிராம் பிரதான சாலை, பாபு நகர், உழைப்பாளர் நகர், கக்கன்ஜி நகர், தண்டுரை, மிட்னமல்லி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் பயனடைந்தனர்.ஐந்து ஆண்டுகளுக்கு முன், அங்கு பணியாற்றிய கால்நடை மருத்துவர் ஓய்வு பெற்றதால், இந்த மருத்துவமனை, பட்டாபிராம் அணைக்கட்டுசேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் கால்நடை வளர்ப்போர் கடும் அவதியடைந்தனர்.குறிப்பாக கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு அவதிப்படும்போது, தடுப்பூசி போடுவதற்கு, மருந்து பெறுவதற்கு, தண்டரை ரயில்வே மேம்பாலத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.அதேபோல், ஆபத்தான வகையில் தண்டவாளங்களை கடந்து 2.9 கி.மீ., சென்று, அணைக்கட்டுசேரியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தவிர, கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்க 5.9 கி.மீ., தொலைவில் உள்ள ஆவடி அல்லது பூந்தமல்லி கால்நடை மருத்துவமனை சென்று சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது.இதுகுறித்து பலமுறை பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், பட்டாபிராம் பகுதியில் மீண்டும் கிளை கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
25-Oct-2024