மேலும் செய்திகள்
அரிவாளுடன் சுற்றிய மூவர் கைது
26-Mar-2025
அமைந்தகரை, வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலையை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 32. தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், 2021ல் மேட்ரிமோனியலில் பெண் தேடி பதிவு செய்திருந்தார்.அதில், அமைந்தகரையை சேர்ந்த தாரணி என்ற பெண்ணின் விபரத்தை பார்த்த ஜெயபிரகாஷ், அபெண்ணின் வீட்டிற்கு சென்று, முறைப்படி பெற்றோரிடம் பேசியுள்ளார். அப்போது, திருமணம் செய்து வைப்பதாக பெண் வீட்டார் உறுதியளித்துள்ளனர்.பின், தாரணி மற்றும் அவரது தந்தை பிரபு, 59, உள்ளிட்டோர், அடிக்கடி ஜெயபிரகாஷிடம் பணம் கேட்டுள்ளனர். நான்கு புதிய மொபைல் போன்கள், புதிதாக வீடு செல்ல அட்வான்ஸ் என, 17 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார்.சில நாட்களுக்கு முன், மகளை திருமணம் செய்து வைக்க முடியாது எனக்கூறி, பணத்தையும் திரும்ப தராமல், தாரணியின் குடும்பத்தினர் தலைமறைவாகினர்.ஜெயபிரகாஷின் புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் விசாரித்ததில், பெண்ணின் குடும்பம் மோசடி செய்தது உறுதியானது.இதையடுத்து, மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, தாரணியின் தந்தை பிரபுவை கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
26-Mar-2025