உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகனை கழுத்து நெரித்து கொன்று தந்தை தற்கொலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தாய் கவலைக்கிடம்

மகனை கழுத்து நெரித்து கொன்று தந்தை தற்கொலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தாய் கவலைக்கிடம்

சென்னை: 'ஆன்லைன்' வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், 7 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மத்திய அரசு ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அண்ணா நகரில் நடந்துள்ளது. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அண்ணா நகர், 18வது பிரதான சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் நவீன் கண்ணன், 38. இவர், தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு கணக்காளர் அலுவலகத்தில், சீனியர் ஆடிட்டராக பணிபுரிந்தார்.இவரது மனைவி நிவேதிதா, 34; இவர், பெரம்பூர், தெற்கு ரயில்வே 'லோகோ' அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார். இவர்களின் மகன் லிவின், 7. இவர்களுடன், நவீன் கண்ணனின் வயதான தந்தை மற்றும் தாய் புவனேஸ்வரி தங்கியிருந்தனர். நவீன் கண்ணன், நேற்று காலை தாய் புவனேஸ்வரியிடம் வெளியில் செல்வதாக கூறி, பதற்றத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். சில மணி நேரத்திற்கு பின், மொபைல் போனில் தாயை தொடர்பு கொண்டவர், மனைவியையும், மகனையும் தொந்தரவு செய்ய வேண்டாம்; அவர்கள் துாங்குகின்றனர் என கூறியுள்ளார்.'பலமுறை போன் செய்தும் நிவேதிதா போனை எடுக்கவில்லை' என, அவரது தாய் இந்திரா தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த புவனேஸ்வரி, மகன் அறைக்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது, பேரன் படுகையில் மயங்கி நிலையிலும், நிவேதிதா கழுத்தில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடியபடியும் கிடந்தனர். புவனேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு, தரைத்தளத்தில் இருந்த தனியார் அங்காடி ஊழியர்கள் ஓடி வந்து, நிவேதா மற்றும் சிறுவனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நிவேதிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து வந்த திருமங்கலம் போலீசார், நிவேதாவிடம் விசாரணை மேற்கொண்டு, நவீன் கண்ணனை தேடினர். இதற்கிடையில், பகல் 11:00 மணியளவில், வில்லிவாக்கம் - கொரட்டூர் இடையே, 'சதாப்தி எக்ஸ்பிரஸ்' ரயில் முன் பாய்ந்து, நவீன் கண்ணன் தற்கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில், மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரியும் நவீன் கண்ணன் மீது, கையாடல் புகார் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 'ஆன்லைன்' வர்த்தகத்தில், லட்சக்ணக்கில் பணத்தை முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நவீன் கண்ணன் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதற்காக, மகனை கொலை செய்து, மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து, தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்காலாம் என, போலீசார் தரப்பில் கூறினர். காப்பாற்ற வேண்டாம் கெஞ்சிய நிவேதிதா உயிருக்கு போராடிய நிவேதிதாவை மீட்கும்போது, ''தன் கணவர் நல்லவர். அவர் மீது எந்த தவறும் இல்லை; மூவரும் சேர்ந்தே சாக முடிவு எடுத்தோம். என்னை காப்பற்ற வேண்டாம்' என, கெஞ்சியுள்ளார். அவற்றை சிலர் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினரின் மொபைல் போன்களை பறிமுதல் செய்து, போலீசார் விசாரிக்கின்றனர். **


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

visu
அக் 28, 2025 20:10

2 பேருக்கும் சேர்த்து 3-4 லட்சம் மேல் மாத வருமானம் பேரப்பிள்ளைகள் சாகும் வரை ஓய்வூதியம் இதற்கு மேல் என்ன எதிர்பார்த்தார்கள் தெரியலை


Rathna
அக் 28, 2025 16:47

இறைவனே இவர்களுக்கு பேராசை இல்லா மறுவாழ்வை தாருங்கள். இரண்டு பேருக்கும் அரசு வேலை. 1.50 லக்ஷ ரூபாய்க்கு மேல் மாத வருமானம். பேராசை மனிதர்களை படுகுழியில் தள்ளும் என்பதை மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கும் கீழே எத்தனை கோடி என்பதை புரிந்து வாழ்ந்தால் எத்தனை நன்மை? குழந்தையின் வாழ்வையும் முடித்து, கொடூரமான கொலையை செய்து ஆயுள் முடியும் வரை பேயாக அலைய வேண்டிதுதான். முன்வினை மற்றும் விதி வலியது.


Krishnamurthy Venkatesan
அக் 28, 2025 13:57

ஆன்லைன் சூதாட்டங்களில் பல விலைமதிப்பில்லா மனித உயிர்கள் மரிக்கின்றன. வருமானம் ஒன்றே குறியாக இருக்கும் மத்திய மாநில அரசுகள் இருக்கும்வரை ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய முடியாது. மக்களும் "பேராசை பெரு நஷ்டம்" என்ற மூதுரையை புறந்தள்ளல் ஆகாது.


KRISHNAN R
அக் 28, 2025 19:05

உண்மை எந்த அரசும் சூதாட்டம் தடை செய்ய முன் வரவில்லை.. ஒழுங்கு படுத்துது என்று ஏமாற்று வேலைகள் நடக்குது.


Abdul Rahim
அக் 28, 2025 12:52

குறைவில்லா வாழ்க்கையை இப்படி தேவை இல்லாமல் தொலைத்து விட்டார் பாவம் அந்த பிஞ்சு மகன் அவன் என்ன பாவம் செய்தான் தாத்தா பாட்டியிடம் விட்டு விட்டு போனால் அவர்கள் வளர்த்திருப்பார்களே .....


jayaraman
அக் 28, 2025 09:26

இருவரும் மத்திய அரசு வேலை சந்தோசமாக வாழ்க்கை நடத்தி இருக்கலாம் ஆன்லைன் தேவையற்றது. பணம் பணம் பணம் அவர்கள் ஆத்மா ஷாந்தி அடையட்டும்


Iyer
அக் 28, 2025 07:47

கடவுள் நமக்கு எவ்வளவு செல்வம் கொடுத்துள்ளாரோ - அதுவே போதும் என்ற மனப்பான்மையுடன் வாழுங்கள். அவசியமே இல்லாத ஆடம்பர பொருட்கள் மீது ஆசைப்படுவது, அடுத்தவர்களை கண்டு அவர்கள் உபயோகிக்கும் விலையுர்ந்த பொருட்களை வாங்க முயற்சிப்பது போன்ற பழக்கங்கள் மிகவும் ஆபத்து.


VENKATASUBRAMANIAN
அக் 28, 2025 07:24

சிலர் பணத்தாசையால் இந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.


chennai sivakumar
அக் 28, 2025 18:37

அது பண வெறி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை