உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகளுக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு 10 ஆண்டு சிறை

மகளுக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு 10 ஆண்டு சிறை

சென்னை:பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு, திருவள்ளூர் நீதிமன்றம், 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.கடந்த 2022ல், கோயம்பேடு பகுதியில் வசித்து வந்த, 14 வயது சிறுமிக்கு, அவரின் தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய், விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, குற்றச்சாட்டில் சிக்கிய நபரை கைது செய்தனர். இந்த வழக்கு, திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கைதான தந்தைக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை