பட்டுப்போன மரங்களால் அண்ணா நகரில் அச்சம்
அண்ணா நகர், அண்ணா நகர், இரண்டாவது அவென்யூ, அய்யப்பன் கோவில் அருகில், தனியார் வணிக வளாகம் வெளியில், சாலையோர வளர்ந்துள்ள மரங்கள், பட்டுபோய் சாய்ந்த நிலையில் உள்ளன.அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, இவை விழுந்து விபத்து ஏற்படலாம். வரும் நாட்கள் மழைக்காலம் என்பதால், விபத்து ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கணக்காணித்து, பட்டுப்போன மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.