உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை கிடங்கான சுடுகாடு தீயிட்டு எரிப்பதால் அவதி

குப்பை கிடங்கான சுடுகாடு தீயிட்டு எரிப்பதால் அவதி

அய்யப்பன்தாங்கல் பரணிபுத்துார் பிரதான சாலை செந்தமிழ் நகர் அருகே, சுடுகாடு மற்றம் காலி மனை உள்ளது. இங்கு, குப்பை கொட்டி குவிக்கப்படுகிறது.இந்த குப்பை கழிவு, அவ்வப்போது தீயிட்டு எரிக்கப்படுவதால், அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை, மூச்சு திணறலால் அவதியடைகின்றனர்.மழைக்காலத்தில், குப்பையுடன் கழிவுநீர் கலந்து வீசும் துர்நாற்றத்தால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.இதுகுறித்து சில ஆண்டுகளுக்கு முன் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, குப்பை அகற்றப்பட்டு, சுற்றிலும் இரும்பு ஷீட்டால் தடுப்புகள் அமைக்கப்பட்டன.இந்நிலையில், அதே இடத்தில் மீண்டும் குப்பை கொட்டி எரிக்கப்படுகிறது. இதை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kalyanaraman
மே 28, 2025 09:27

தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் பட்டாசு வெடித்தால் மாசு ஏற்படுத்தியதாக அபராதம் விதிக்கும் போது, அதைவிட பல ஆயிரம் மடங்கு மாசை ஏற்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் என்ன தண்டனை? அரசு ஊழியர்கள் எது செய்தாலும் அவர்களுக்கு எந்த தண்டனை கிடையாது கடும் தண்டனையும் அபராதம் இருந்தால் மட்டுமே இது போன்ற அவலங்கள் குறையும்.


சமீபத்திய செய்தி