உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கும்மிருட்டில் மேடவாக்கம் மேம்பாலம் சமூகவிரோத செயல்களால் அச்சம்

கும்மிருட்டில் மேடவாக்கம் மேம்பாலம் சமூகவிரோத செயல்களால் அச்சம்

மேடவாக்கம், பரங்கிமலை ஒன்றியத்திற்கு உட்பட்டது மேடவாக்கம். இங்கு அமைந்துள்ள, மேம்பாலங்களில் இரவு நேரங்களில், மின்விளக்குகள் ஒளிராததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். வாகன முகப்பு விளக்கு வெளிச்சத்திலேயே பயணிப்பதால் விபத்து அபாயம் உள்ளது.மேடவாக்கத்தில், 2021 மற்றும் 2022 ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து, இரண்டு மேம்பாலங்கள் புதிதாக திறக்கப்பட்டன. தினமும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேடவாக்கம் மேம்பாலத்தில் இரவு நேரங்களில், மின்விளக்குகள் ஒளிராததாலும், பாலத்தின் ஓரத்தில் மண்குவிந்து கிடப்பதாலும், வாகன ஓட்டிகள், அவ்வப்போது விபத்துகளில் சிக்குகின்றனர். இரவில் பாலம் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளதால், சமூக விரோத செயல்களும் அதிகரித்துள்ளன. சிலர், பாலத்தின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி மது அருந்துகின்றனர். சென்னையின், மிக நீளமான இப்பாலத்தின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களும், இப்பிரச்னையால் சிரமத்துக்கு ஆளாகின்றனர். தவிர, காதல் ஜோடிகள் இரவு நேரங்களில் இங்கு திரள்வதால், பெண்கள், வாகன ஓட்டிகள் உள்பட அனைவரும் முகம் சுளித்த படி செல்கின்றனர்.இப்பாலத்தில், மின் விளக்கு பிரச்னை பல மாதங்களாக நீடித்து வருகிறது. விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை