மேலும் செய்திகள்
பட்டாபிராமில் தீக்குளித்து தாய் --- மகள் தற்கொலை
11-Jan-2025
பல்லாவரம், :ஜமீன் பல்லாவரம், பாரதி நகர் 2வது குறுக்கு தெரு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 43; பல் மருத்துவர். இவர், சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, இவரது வீட்டில் தீப்பிடித்து எரிந்து, வெடி சத்தம் கேட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த பல்லாவரம் போலீசார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனலட்சுமி தீக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.அருகே மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டி இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தீயை அணைத்து தனலட்சுமியின் உடலை மீட்டு, அனுப்பி வைத்து விசாரித்தனர்.இதில் தெரிய வந்ததாவது:தனலட்சுமியின் சொந்த ஊர் மதுரை. இவரது கணவர் பாலவெங்கடேஷ். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த ஓராண்டாக தனியாக வசிந்து வந்தார். ஜமீன் பல்லாவரத்தில், நான்கு மாதங்களாக வசிந்து வந்தார்.தனலட்சுமி, சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தன் சகோதரர் துரை கதிர்வேல் என்பவரிடம், தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக, தனலட்சுமி கூறி வந்ததாகவும் தெரிகிறது.இந்த நிலையில், தன்னைத்தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், தனலட்சுமி உடலில் பற்றி எரிந்த தீயால், வீட்டில் இருந்த 'ஏசி' மற்றும் மின் சாதனங்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
11-Jan-2025