நிதி நிறுவனம் மோசடி மீண்டும் விசாரணை
சென்னை: சென்னையில் செயல்பட்டு வந்த, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோரிடம், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில், அக்குவேலன் சிட்ஸ் பி.லிட்., என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் பொதுமக்கள் முதலீடு செய்த 40 லட்சம் ரூபாயை, அதன் நிர்வாகிகள் மோசடி செய்தது தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதால், பாதிக்கப்பட்ட நபர்களிடம் போலீசார் மீண்டும் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில்,'பாதிக்கப்பட்டோர் யாரையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக, முழு விசாரணை நடத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சொத்துகள் உள்ளதா என்பது குறித்தும், ஆய்வு செய்து வருகிறோம்' என்றனர்.