உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணா நகரில் விதிமீறல் 18 பைக்குகளுக்கு அபராதம்

அண்ணா நகரில் விதிமீறல் 18 பைக்குகளுக்கு அபராதம்

அண்ணா நகர்:அண்ணா நகர், கோயம்பேடு 100 அடி சாலை முதல் அடையாறு வரை, 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கடந்த 24ம் தேதி இரவு, பைக் ரேஸில் ஈடுபட்டனர்.விசாரணையில், ஆன்லைனில் பந்தயத்தை பதிவு செய்து, ரேஸ் ஓட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக, கல்லுாரி மாணவர்கள் உட்பட, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல், வார இறுதி நாளான சனிக்கிழமைகளில், 'ரேஸ்' நடத்த திட்டமிடுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகர் காவல் மாவட்ட போக்குவரத்து போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அண்ணா நகர் ரவுண்டனா, திருமங்கலம், கோயம்பேடு, சிந்தாமணி உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனை செய்த போது, பதிவெண் இல்லாமல், ஒரே வாகனத்தில் மூவர் பயணித்தல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபட்ட, 18 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.நேற்று, சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து, உரிமையாளர்களை எச்சரித்து அனுப்பினர். அதே நேரத்தில், பிடிபட்டவர்களில் பைக் ரேஸில் பங்கேற்போர் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !