ஏ.டி.எம்.,மில் தீ விபத்து
சிட்லப்பாக்கம், சிட்லப்பாக்கம், அண்ணா தெருவில், ஹெச்.டி.எப்.சி., - ஏ.டி.எம்., மையம் உள்ளது. இந்த மையத்தில் கண்காணிப்பு கேமரா இணைப்புகளை சரிசெய்யும் பணி, நேற்று நடந்தது.அப்போது, மின் கசிவால், திடீரென மின் வடங்கள் கரும்புகையுடன் எரிந்தன. சிறிது நேரத்தில் ஏ.டி.எம்., மையம் முழுதும் எரிந்தது. இயந்திரத்தினுள் 8.50 லட்சம் ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது.