உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செங்குன்றம் அருகே ரசாயன கிடங்கில் தீ விபத்து

செங்குன்றம் அருகே ரசாயன கிடங்கில் தீ விபத்து

செங்குன்றம், செங்குன்றம் அடுத்த சென்றம்பாக்கத்தில், 'ஸ்வத்திக்' என்ற பெயரில், பெயின்ட் மூலப்பொருட்கள் தயாரிக்கும் ரசாயன கிடங்கு இயங்கி வருகிறது.புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஹரிஹரன், 47, என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு பேரல் பேரலாக ரசாயனங்கள் இருப்பு வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இந்த கிடங்கில், நேற்று மாலை 4:00 மணியளவில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.மாவட்ட அலுவலர் லோகநாதன் தலைமையில், மாதவரம், செங்குன்றம், மணலி, அம்பத்துார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.பேரல்களுக்கு மேல் ரசாயன மூலப் பொருட்கள் இருந்ததால் தீயை கட்டுப்படுத்த போராட வேண்டியிருந்தது. இரண்டு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அங்கு பணியாற்றிய வடமாநிலத்தவர் ஏழு பேரும் காயமின்றி தப்பினர்.கிடங்கு அருகில் எரிவாயு சிலிண்டர்கள் வைக்கும் கிடங்கு இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிலிண்டர்களை உடனே அப்புறப்படுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை