உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் தீ விபத்து

எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் தீ விபத்து

சென்னை, எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள தொலை தொடர்பு பிரிவு அலுவலகத்தின் கேபிளில், நேற்று மதியம் 2:55 மணிக்கு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.உடனடியாக, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து வந்த எழும்பூர், வேப்பேரி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.குறித்த நேரத்தில் தீ விபத்து குறித்து தகவல் தெரிவித்ததால், பெரும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.தீ விபத்துக்கான காரணம் குறித்து, தீயணைப்பு படையினர், ரயில்வே போலீசார் மற்றும் எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த தீ விபத்தால், எந்தவித ரயில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்படவில்லை என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !