உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  குப்பை தரம் பிரிக்கும் கூடத்தில் தீ விபத்து

 குப்பை தரம் பிரிக்கும் கூடத்தில் தீ விபத்து

எண்ணுார்: குப்பையை தரம் பிரிக்கும் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. எண்ணுார் அடுத்த எர்ணாவூர் அனல் மின் நிலைய குடியிருப்பு வெளிப்புறம் - கத்திவாக்கம் நெடுஞ்சாலையோரம், குப்பை தரம் பிரிக்கும் கூடம் உள்ளது. இங்கு, துாய்மை பணி மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனம், மக்கும், மக்கா குப்பையை தரம் பிரித்து இருப்பு வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில், குப்பை தரம் பிரிக்கும் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, கொழுந்து விட்டெரிந்தது. அக்கம் பக்கத்தினர் சுதாரித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். எண்ணுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி