மேலும் செய்திகள்
மண்டபத்தில் மின் கசிவால் குடிசை வீடுகள் எரிந்தது
27-Nov-2024
வியாசர்பாடி:வியாசர்பாடி, பாலகிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வி, 32. வியாசர்பாடி போக்குவரத்து காவல் நிலைய முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ராஜா.இருவரும் பணிக்கு சென்ற நிலையில், நேற்று மாலை பாண்டிசெல்வியின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. சற்று நேரத்தில் மளமளவென தீ பரவி, வீட்டில் இருந்த பொருள்கள் எரிய துவங்கின.பெரம்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.அதற்குள், வீட்டில் இருந்த 'பிரிஜ், வாஷிங்மிஷின், டிவி' மற்றும் கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. விபத்து குறித்து வியாசர்பாடி விசாரிக்கின்றனர்.
27-Nov-2024