உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்

தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்

சென்னை: அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, நேற்று மாலை சரக்கு வாகனம் தீப்பற்றி எரிந்ததால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரும்பாக்கம், வெங்கடகிருஷ்ணன் நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 35. இவர், சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். நேற்று மாலை, சரக்கு வாகனத்தை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஓட்டிச் சென்றபோது, திடீரென வாகனத்தின் இன்ஜினில் புகை வந்ததால், சாலையோரம் வாகனத்தை நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்திலேயே வாகனம் தீப்பற்றி எரிந்தது. சம்பவம் அறிந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து, சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், சிறிது நேரம் அரும்பாக்கம், 100 அடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ