| ADDED : நவ 14, 2025 03:13 AM
ஆலந்துார்: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து, ஒரு லட்சம் ரூபாய், 12 சவரன் நகைகள் எரிந்து நாசமாயின. மணப்பாக்கத்தில், 280 குடியிருப்புகள் உடைய தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் மூன்றாவது தளத்தில் விசுவநாத், 44; என்பவர் குடும்பத்துடன் வசிக்கிறார். விஸ்வநாத், தன் பிறந்தநாளை முன்னிட்டு, அருகிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு மனைவி லட்சுமியுடன் சென்றார். அப்போது, அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. நந்தம்பாக்கம் போலீசார், விருகம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, மதுரவாயல், அசோக் நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், தீ கட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கப்பட்டன. இந்த விபத்தில், ஒரு லட்சம் ரூபாய், 12 சவரன் தங்க நகைகள், கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமாயின. மேலும், நான்காவது மாடியின் ஒரு வீட்டின் 'ஏசி' யூனிட் பாதிக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.