உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற தீயணைப்பு அதிகாரி கைது

ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற தீயணைப்பு அதிகாரி கைது

ராமாபுரம், வளசரவாக்கத்தைச் சேர்ந்த அஜீஸ் என்பவர், ராமாபுரத்தில் புதிதாக அழகு நிலையம் துவங்குவதற்காக, தீயணைப்பு துறை சான்றிதழ் கோரி, 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பம் செய்தார். இதற்கு அனுமதி வழங்க, ராமாபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோவன், 25,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்; பின் பேரம் பேசி 10,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் தர விரும்பாத அஜீஸ், சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் தந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அஜீஸ், அதிகாரி இளங்கோ கூறியதாக தீயணைப்பு வீரர் முனுசாமியிடம் கொடுத்தார். அங்கு, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், முனுசாமியை கையும், களவுமாக பிடித்தனர். விசாரணைக்கு பின், முனுசாமி மற்றும் அதிகாரி இளங்கோவன் ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ