மேலும் செய்திகள்
தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
15-Apr-2025
தாம்பரம், கடந்த, 1944ம் ஆண்டு, மும்பை துறைமுகத்தில் நின்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைக்கும் பணியின் போது உயிர் நீத்த, 66 தீயணைப்பு வீரர்களின் நினைவாக, நாடு முழுதும், ஏப்., 14ம் தேதி தீ தொண்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது.இந்தாண்டு, 'தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்' என்ற தலைப்பில், தீ தொண்டு நாள் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக, தென்சென்னை மாவட்ட தீயணைப்பு துறை சார்பில், தீத்தடுப்பு விழிப்புணர்வு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி, தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில், நேற்று மாலை நடந்தது.தென்சென்னை மாவட்ட அலுவலர் லோகநாதன் தலைமையில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில், தீத்தடுப்பு, உயர்மாடி கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால், அதை எப்படி கையாளுவது, விபத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது உள்ளிட்ட செயல்முறைகளை, தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.
15-Apr-2025