மேலும் செய்திகள்
தீபாவளி வசூலுக்கு 'மதுவிலக்கு விரிக்குது வேஷ்டி'
30-Sep-2025
கட்சிகளின் நிதி விளையாட்டு!
20-Sep-2025
சென்னை,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில், 30 பட்டாசு கடைகளை, அமைச்சர் சேகர்பாபு நேற்று திறந்து வைத்தார். இந்தாண்டு தீபாவளிக்காக, தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க ஏலம் விடப்பட்டு, 30 கடைகள் அமைக்கப்பட்டன. இந்த கடைகளை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று திறந்து வைத்தார். சேகர்பாபு கூறுகையில், ''30 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை அனைத்தும் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டவை. சீன பட்டாசுகளுக்கு இங்கு இடமில்லை,'' என்றார். மொத்த விற்பனையாளர் சங்க தலைவர் ஷேக் அப்துல்லா கூறுகையில், '' தீவுத்திடலில், 500 வகையான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. குறைந்தபட்சம், 250 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை 'கிப்ட் பாக்ஸ்' கிடைக்கும். இங்கு, 10 முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்கப்படுகிறது,'' என்றார். தீ பாவளி மறுநாள் வரை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பட்டாசுகள் விற்கப்படும்.
30-Sep-2025
20-Sep-2025