வாசகர்கள் கருத்துகள் ( 1 )
what about dogs found at the entrance in large numbers
சென்னை: சென்னை விமான நிலைய முனையங்கள் மற்றும் 'புட் கோர்ட்'களில் பறவைகள் சுற்றித்திரிகின்றன. தடுப்பு நடவடிக்கைகளில், ஆணைய அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. சென்னை விமான நிலையம் மூன்று முனையங்களுடன் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில், பறவைகள் உலா வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுவாக விமான நிலையங்களை சுற்றி பறவைகள் நடமாட்டம் இருப்பதால், அவை விமான இயக்கங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகும். சில மாதங்களுக்கு முன், விமான நிலைய வருகை முனையத்தின் அருகே, காக்கைகள் கூடுகட்டி இருந்தன. அவற்றை விமான நிலைய அதிகாரிகள் அகற்றினர். இந்நிலையில், விமான நிலைய சர்வதேச முனைய உணவு கூடத்தில், புறாவின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பயணியர் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும்போது புறா உள்நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பயணி ஒருவரின் வலைதள பதிவில், 'சென்னை விமான நிலையத்தின் உணவு கூடத்தில் இடம் இல்லாமல், வரிசையில் நிற்போர், மெதுவாக நகர்ந்து செல்லும் நிலை உள்ளது. 'இது ஒரு பக்கம் பிரச்னை என்றால், அதற்கு மேலாக சர்வதேச முனைய, 'புட் கோர்ட்' முன் பறவைகள் வந்து அமர்கின்றன. தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் ஆபத்தாக முடியும்' என, குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள சென்னை விமான நிலைய அதிகாரிகள், 'எங்களின் பறவைகள் கட்டுப்பாட்டு குழு, பிரச்னையை சரிசெய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. 'பறவைகள் நுழையாமல் இருக்க, 'நெட்' அமைத்துள்ளோம். இதை மீறி பறவைகள் உள்நுழைவதற்கான காரணம் குறித்து, ஆய்வு செய்து வருகிறோம்' என பதில் அளித்துள்ளனர்.
what about dogs found at the entrance in large numbers