உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல் டிவிஷன் கால்பந்து தொடர்கிறது ஒத்திவைப்பு

முதல் டிவிஷன் கால்பந்து தொடர்கிறது ஒத்திவைப்பு

சென்னை, சென்னை ஐ.சி.எப்., மைதானத்தில், சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான முதல் டிவிஷன் கால்பந்து லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தளபதி ஸ்டாலின், டி.பி.ஒய்.சி., அணிகள் உட்பட எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், சாய் அணியை தவிர அனைத்து அணிகளுக்கும் ஆறு போட்டிகள் முடிந்து விட்டன.வெற்றியாளரை தீர்மானிக்க, மீதமுள்ள 6 போட்டிகளிலும் சாய் அணியை எதிர்த்து அனைத்து அணிக்கும் ஒரு போட்டி நடைபெற வேண்டியுள்ளது. ஆனால், சாய் அணி போட்டிக்கு வர மறுப்பதால், போட்டி தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகிறது.அரசால் அங்கீகரிக்கப்பட்ட அணியான சாய் அணியால், ஒட்டுமொத்தப் போட்டியும் நிறுத்தப்படுவது, சென்னை கால்பந்து அமைப்புக்கு பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.இது குறித்துச் சென்னை கால்பந்து அமைப்பு அதிகாரி கூறுகையில், ''சாய் அணி எங்களிடம் போட்டியில் கலந்துகொள்வதாகவும், பெயரை சேர்த்துக்கொள்ளும் கூறிவிட்டு, போட்டி துவங்கிய பின் சாய் அணி எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இது ஒட்டுமொத்த அணிக்கும் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை