முதல் டிவிஷன் கால்பந்து லீக் தளபதி ஸ்டாலின் அணி வெற்றி
சென்னை சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான முதல் டிவிஷன் கால்பந்து போட்டி, சென்னை, கண்ணப்பர் திடல் மைதானத்தில் நடக்கிறது. நேற்று நடந்த போட்டியில் சாய் அணி, தளபதி ஸ்டாலின் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில் தளபதி ஸ்டாலின் அணி, சாய் அணியை 5 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தளபதி ஸ்டாலின் அணி சார்பில், இளவரசன் 3வது மற்றும் 30வது நிமிடத்தில், இரண்டு கோல் பதிவு செய்தார். தொடர்ந்து காமேஷ் 16வது நிமிடம், சபரீஷ் 49வது நிமிடம், சஞ்சய் 58 வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். சாய் அணி சார்பில் சூர்யா 27வது நிமிடம் மற்றும் வினோத் 44வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்து, அணிக்கு ஆறுதல் அளித்தனர்.