உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காசிமேடில் வரத்து குறைவு மீன் பிரியர்கள் ஏமாற்றம்

காசிமேடில் வரத்து குறைவு மீன் பிரியர்கள் ஏமாற்றம்

காசிமேடு:காசிமேடு துறைமுகத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் மீன் வாங்க சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவர். இதனால், அதிகாலை முதலே அப்பகுதி மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கும்.அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே, காசிமேடு துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 40க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின. இருந்தும், மீன் வரத்து குறைவாக இருந்ததால், மீன் விலை உயர்ந்து காணப்பட்டது. பொதுமக்கள் பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர்.மீன் விலை நிலவரம்மீன் வகை கிலோ (ரூ.)வஞ்சிரம் 850 - 900வெள்ளை வவ்வால் 1,200கறுப்பு வவ்வால் (சிறியது) 500 - 600கறுப்பு வவ்வால் (பெரியது) 700 - 800பாறை 400 - 500சங்கரா 400 - 450சீலா 300 - 400நெத்திலி 300கானாங்கத்த 200 - 300கவளை 50 - 100நண்டு 300இறால் 300 - 400டைகர் இறால் 1,100


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !