மேலும் செய்திகள்
தைப்பூசம் எதிரொலி: காசிமேடில் மீன் விலை சரிவு
02-Feb-2026
காசிமேடு: காசிமேடு மீன் சந்தையில் மீன்களின் விலை சரிந்ததால், விற்பனை களைகட்டியது. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நேற்று அதிகாலை கரை திரும்பின. அதேநேரம், மீன்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் சந்தைக்கு வந்திருந்தனர். சமீபமாக மீன்களின் வரத்து குறைந்திருந்த நிலையில், விலை உயர்வாக இருந்தது. வழக்கத்திற்கு மாறாக, நேற்று பெரிய மற்றும் சிறிய ரக மீன்களின் வரத்து அதிகம் இருந்தது. குறிப்பாக வஞ்சிரம், கேரை, பாறை, சூரை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து விற்பனையானது. இதனால், மக்கள் போட்டி போட்டு பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர். மீன் விலை நிலவரம்வகை கிலோ (ரூ.) வஞ்சிரம் 700 --800 கறுப்பு வவ்வால் 700 -- 800 வெள்ளை வவ்வால் 1,000 - 1,200 பாறை 400 - 500 சங்கரா 300 - 400 கடல் விரால் 500 - 600 கவளை 50 - 100 கானங்கத்த 150 - 200 தும்பிலி 100 -- 150 வாளை 100 - 150 முளியான் 150 - 200 கடம்பா 400 - 500 நண்டு 400 - 500 வரி நண்டு 600 - 700 இறால் 300 - 350 டைகர் இறால் 1,000 - 1,100 -------------------------
02-Feb-2026