மேலும் செய்திகள்
தரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய வலியுறுத்தல்
03-May-2025
சென்னை :தமிழக அரசின் மீன்வளத் துறை சார்பில், 'மீன்வளத் திருவிழா -2025' எனும் கடல் உணவு சார்ந்த திருவிழா, சென்னை தீவுத்திடலில் இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.இதுகுறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னை தீவுத்திடலில் மீன்வள திருவிழா இன்ற துவங்குகிறது. ஜூன் 1 வரை மூன்று நாட்கள், காலை, 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம்.விழாவில், மீன்பிடி மற்றும் கடல்சார்ந்த தொழில்கள் மேற்கொள்ளும் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம். பெற்றோர் மற்றும் குழந்தைகள், கடல் உணவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம். வண்ண மீன் கண்காட்சி, மீன் உணவு வகைகள், கடல் உணவு கண்காட்சியும் உள்ளது. சமையல் கலைஞர்கள் உணவு வகைகளின் செய்முறை விளக்கத்தையும் தருவர். சமையல் போட்டிகள் நடக்கின்றன.மீன்வளத்திற்கான புதிய தளங்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யவும், தமிழ் உணவு பண்பாட்டையும், மீன்பிடி தொழிலையும் வலுப்படுத்தவும் உணவு திருவிழா வழிவகுக்கும். புதிய கலாசார அனுபவமாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.***
03-May-2025