உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடலில் தவறி விழுந்த மீனவர் பலி

கடலில் தவறி விழுந்த மீனவர் பலி

காசிமேடு காசிமேடு சிங்காரவேலர் நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் குமார், 60; மீனவர். இவர், நேற்று அதிகாலை, மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, தன் கட்டுமரத்தில் சென்று, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தார்.இந்நிலையில், நேற்று அவரது உடல், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கரை ஒதுங்கியது. காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி